Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 374 மாவட்டங்கள்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்திய அளவில் 374 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள் என பல்கலைக்கழக மானியக் குழு நடத்திய ஆய்வில் தெரியவந்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின் தங்கிய உள்ளதாகவும், அதிக பின்தங்கிய மாவட்டங்களில் கொண்டிருக்கும் மாநிலங்களில் உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகியவை முதல் மூன்று இடத்திலும் தமிழகம் 4வது இடத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |