ரியல் டைம் பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்ஸ் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அமெரிக்கா நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் பில்கேட்ஸ். இவரின் மனைவி பெயர் மெலிண்டா. இவர்கள் இருவரும் அண்மையில் அவர்களின் 27 ஆண்டு கால குடும்ப வாழ்விலிருந்து விடுதலை பெற்றனர். இதனை அடுத்து ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் வெளியிட்ட ரியல் டைம் பணக்காரர் தரவரிசையில் பில்கேட்ஸ் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதற்கு பில்கேட்ஸின் மனைவியான மெலிண்டாவை விவாகரத்து செய்ததே காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவரது முன்னாள் மனைவி மெலிண்டாவிற்கு புதிதாக சொத்துக்களை பரிமாற்றம் செய்துள்ளார்.
இதன் காரணமாக அவரின் சொத்து மதிப்பு 129.6 மில்லியன் டாலராக உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் மெலிண்டாவிற்கு 2.4 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பங்குகள் கொடுக்கப்பட்டுள்ளது என ஃபோர்ப்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் 5-வது இடத்திற்கு சரிந்துள்ளார். குறிப்பாக முகநூல் நிறுவனரான மார்க் ஜுக்கர்பெர்க் உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவரின் சொத்து மதிப்பு 130.3 மில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.