Categories
உலக செய்திகள்

50 ஆண்டு கால மணவாழ்வு…. இறப்பிலும் இணை பிரியாதவர்கள்…. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த தம்பதிகள்….!!

ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு ஒன்றாகவே உயிரிழந்துள்ளனர்.

ஸ்காட்லாந்தில் உள்ள Auchtermuchty பகுதியைச் சேர்ந்தவர்  73 வயதான John மற்றும் அவரின் மனைவி 71 வயதான May Cropley ஆவார். இவர்கள் இருவரும் 50 ஆண்டு கால மணவாழ்வில் இணைந்து சந்தோசமாக உள்ளனர். மேலும் இந்த தம்பதியினர் ஒன்றாகவே இணைந்து  சுயமாக தொழில் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக இருவரும் முழுமையாக தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். ஆனாலும் அந்த தம்பதியினருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனால் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரே அறையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்த நிலையில் John சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து அவரது மனைவியான May Cropley வும் John இறந்த 12 மணி நேரத்திற்குள் உயிரிழந்துவிட்டார். இவர்கள் இருவருக்கும் முதுமையின் காரணமாக நோய்கள் இருந்துள்ளதாகவும் கடந்த 2019ல் May Cropley புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த வாரம் அந்த தம்பதியினரின் இறுதிச் சடங்குகள் உறவினர்கள் தரப்பிலிருந்து நடத்தப்பட்டது.

Categories

Tech |