டெல்லியில் முகக்கவசம் அணிய கூறிய அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த தொற்றானது தற்போது தான் படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. அதேபோல் தலைநகர் டெல்லியிலும் தொற்று பரவலாக குறைந்துள்ளது. இதனால் அங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொது இடங்களில் மக்கள் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்களா? என்பதை கண்காணிப்பதற்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்படி டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கடந்த வெள்ளிக்கிழமை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர் முகக் கவசம் அணியாமல் வந்ததை பார்த்த அதிகாரிகள் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.
அப்போது அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த பெண் தனது தோழியை செல்போன் மூலம் அழைத்து, அவர் வந்ததும் இருவரும் சேர்ந்து அதிகாரியை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து தடுப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய இரண்டு பெண்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்யப்பட்டனர்.