Categories
தேசிய செய்திகள்

“மேகதாது அணைக்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும்”… பசவராஜ் பொம்மை நம்பிக்கை…!!!!

காவிரி படுக்கையில் கூறியுள்ளதன் படி உபரி நீரில் கர்நாடக மாநிலத்திற்கு முழு உரிமை உள்ளது. இதனால் காவிரி ஆற்றின் அருகே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக கூறியுள்ளார். மேகதாது அணைக்கு தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மை அணையை கட்டியே தீருவோம் என்ற நிலைப்பாட்டில் தீவிரமாக உள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கர்நாடக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி கேள்வி ஒன்றை எழுப்பியது.

மேகதாது அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் வேண்டுமா? என்று கேள்விக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் ஒப்புதல் தேவை என்பதை அவர் உறுதிப்படுத்தினார். இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது: “மேகதாது அணை கட்ட விரைவில் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

இதற்கான விரிவான அறிக்கையை ஏற்கனவே சமர்ப்பித்து உள்ளேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் மேகதாது விவகாரம் தொடர்பாக நான் டெல்லிக்கு சென்ற போது அவர்கள் அணைக்கு ஒப்புதல் தருவதாக என்னிடம் கூறினார்கள். மேகதாது அணை தொடர்பாக விரைவில் நான் டெல்லி செல்வேன். மத்திய அமைச்சர்களை சந்தித்து இந்த திட்டம் குறித்த உண்மையான நிலவரத்தை தெளிவுபடுத்தி அதற்கான அனுமதியும் வாங்குவேன். அதுமட்டுமல்லாமல் இந்த விவகாரத்தில் சட்ட குழுவினருடன் ஆலோசனை மேற்கொள்வேன். இந்த அணை திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளின் நலனுக்காக மட்டுமே. இதில் எந்த அரசியல் நோக்கமும் கிடையாது. மேகதாது அணை ஒரு பல்நோக்கு திட்டம். இந்த திட்டத்தை அமல்படுத்திய தீருவோம்” என்று அவர் உறுதி கூறியுள்ளார்.

Categories

Tech |