Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : சென்னை வந்தடைந்தார் தல தோனி …. திரண்ட ரசிகர்கள் கூட்டம்….!!!

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி குடும்பத்துடன் சென்னைக்கு வந்துள்ளார்  

14-வது சீசன் ஐபிஎல் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் தொடரில் ஒரு சில வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19-ம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணி வீரர்கள்  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தன் குடும்பத்துடன் சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.இதனால் தோனியை  காண விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.

https://twitter.com/TrendsDhoni/status/1424922623494918144

இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் கேப்டன் தோனியுடன் அணி வீரர்கள் சிலர், சென்னையில் இருந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல இருப்பதாக தெரிகின்றது. இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. அத்துடன் புள்ளி பட்டியலில் டெல்லி அணி முதலிடத்திலும் ,சென்னை அணி 2-வது இடத்திலும் ,பெங்களூரு 3-வது இடத்திலும், மும்பை           4-வது இடத்திலும் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |