Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் முகேன் ஹீரோவாக நடிக்கும் ‘வேலன்’… அசத்தலான அப்டேட் இதோ…!!!

பிக்பாஸ் பிரபலம் முகேன் ஹீரோவாக நடிக்கும் வேலன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் முகேன் ராவ். மலேசிய தமிழரான இவர் பல ஆல்பம் பாடல்களை பாடி பிரபலமடைந்தவர். இதையடுத்து பிக்பாஸில் கலந்து கொண்ட முகேன் சிறப்பாக விளையாடி டைட்டிலை வென்றார். இதை தொடர்ந்து இவருக்கு தமிழ் படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி இயக்குனர் கவின்  இயக்கத்தில் உருவாகியுள்ள வேலன் படத்தில் முகேன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபு, சூரி, தம்பி ராமையா, ஹரிஷ் பரேடி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்கை மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் வேலன் படத்தின் ஆடியோ உரிமைகளை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |