கர்ப்பிணிப் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி பகுதியில் கமல் பிரசாத் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு செல்வநாயகி என்ற மனைவி இருந்துள்ளார். மேலும் செல்வராணி ஏழு மாத கர்ப்பிணி ஆவார். இந்நிலையில் திருமணமாகி ஒரு வருடமே ஆகிய நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த செல்வநாயகி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் செல்வநாயகியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செல்வநாயகி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.