முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.
வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும்.
எரிப்பதற்க்கு மண்ணெண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எரிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.
அரச மரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு தூப,தீபம்-நிவேதனம் செய்து வழிபட்டால் பண புழக்கம் அதிகரிக்கும். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.
செவ்வாயின் பாகமான தெற்கில் 7 நல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம் காட்டி வேண்டி வர, வருடக்கணக்கில் வராத கடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட பொருட்களும் திரும்ப சேரும்.வீட்டிலேயே செய்யலாம்.
7 பற்கள் மட்டுமே உள்ள வெள்ளை பூண்டு வாங்கி வந்து அதனுடன் 7 காய்ந்த மிளகாகளையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி வீடு, கடை, ஆபீஸ் வாசல்களில் தொங்க விட திருஷ்டிகள் சகலமும் விலகி நன்மை சேரும்.
வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது அருகம் புல் நுனி ஒன்று பறித்து எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல செல்லும் காரியம் வெற்றி அடையும்.
உங்கள் வீட்டு பணப்பெட்டியில் ஏலக்காய், பச்சைகற்பூரம், சந்தனம், வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமைகளில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு ஏற்படும்.
உங்களின் வீட்டு படுக்கை அறையில் கண்ணாடி இருக்கக்கூடாது, மூன்றாம் மனிதனின் குறுக்கீடு இருக்கும் , அல்லது குழந்தை வாய்பேசாமல் போகவும் வாய்ப்புண்டு. அப்படி இருந்தால் இரவில் மூடி வைத்து விடுங்கள்
சிறிது கல் உப்பை ஒருகின்னத்தில் போட்டு , கழிவறையில் வைத்தால் கெட்ட சக்திகளை இழுத்து கொள்ளும் ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும்.
வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது.இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்தும்.
கோவில் கொடி, கொடிமரம், கோவில் கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின் மேல் படியக்கூடாது.