Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கடலில் மீன் வளர்ப்பவர்களுக்கு… 40% மானியம் வழங்கப்படும்… ஆட்சியர் வெளியிட்ட தகவல்…!!

கடலில் 10 கூண்டுகள் அமைத்து மீன் வளர்ப்பவர்களுக்கு பிரதமர் சிறப்பு திட்டத்தின் கீழ் 40% மானியம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் கடற்பகுதிகளில் கூண்டுகள் அமைத்து மீன் வளர்க்க முன் வருபவர்களுக்கு பிரதமரின் சிறப்பு திட்டத்தின் கீழ் 40% மானியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி 10 கூண்டுகள் அமைத்து மீன் வளர்க்க முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.

இதற்கு விருப்பமுள்ள பயனாளிகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு அதனை பூர்த்தி செய்து ராமநாதபுரம் மீன்வளத்துறை மண்டல துணை இயக்குனரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அறிவித்துள்ளார்.

Categories

Tech |