கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிப்பதாக தகவல் பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
https://www.instagram.com/p/CSV5d-Hpl11/?utm_source=ig_embed&ig_rid=268b5dc8-c39a-4524-89b2-9cc8d885dab1
இதுவரை இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடவில்லை. இந்நிலையில் பிரபல நடிகை ஆண்ட்ரியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ‘Code Red’ என பதிவிட்டுள்ளார். சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இதே வார்த்தை குறிப்பிடப்பட்டிருந்ததால் ஆண்ட்ரியா ‘விக்ரம்’ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.