உலகில் உள்ள அனைத்து தமிழர்களிடமும் தனது பேச்சால் புகழின் உச்சிக்கு சென்றவர் பாரதி பாஸ்கர். சாலமன் பாப்பையா தலைமையில் பாரதி பாஸ்கரும், ராஜாவும் விவாதிக்க தொடங்கினால் நாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம். பட்டிமன்றத்தில் இவரின் பேச்சுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த பட்டதாரி. இவர் தனியார் வங்கியில் மிகப்பெரிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார். அவ்வபோது சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற குழுவில் இணைந்து பேசி வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவருக்கு மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் சற்று நேரத்தில் அவரது உடல் நலம் குறித்து மருத்துவ அறிக்கை வெளியாகும் என்று கூறப்படுகின்றது.