Categories
விளையாட்டு கிரிக்கெட்

டிஎன்பிஎல் கிரிக்கெட்…. நாளை பிளே ஆப் சுற்று…!!!!!

தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது. கொரோனா பரவல் அச்சுறுத்தலால் அனைத்துப் போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடின.  ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்து விட்டன.
அதில் ரூபி திருச்சி வாரியரஸ் 10 புள்ளியுடன் முதல் இடத்தையும், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 9 புள்ளியுடன் 2-வது இடத்தையும், திண்டுக்கல் டிராகன்ஸ் 8 புள்ளியுடன் 3-வது இடத்தையும், லைகா கோவை கிங்ஸ் 7 புள்ளியுடன் 4வது இடத்தையும் பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.‘பிளேஆப்’ சுற்று ஆட்டம் நாளை (10ம் தேதி) தொடங்குகிறது. சென்னையில் நாளை நடைபெறும் ‘குவாலிபையர் 1’ ஆட்டத்தில் முதல் இடத்தை பிடித்த ரூபி திருச்சி வாரியர்ஸ் இரண்டாம் இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.

Categories

Tech |