Categories
டெக்னாலஜி பல்சுவை

புதிதாக களமிறங்கும் ஸ்மார்ட் ஃபோன் மாடல்கள்- சிறப்பம்சங்கள் என்ன?

பண்டிகை காலம் என்பதால் இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களும் அடுத்தடுத்து புதிய மாடல் போன்களை அறிமுகம் செய்து வருகின்றனர் அது பற்றிய ஒரு பார்வை.

பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை தயாரித்து சந்தையில் அதிரடியாக நுழைந்த சீனாவைச் சேர்ந்த ரியல்மி நிறுவனம் பின்னர் ரியல் மீ எக்ஸ் என்ற ப்ரீமியம் வகை போனை அறிமுகம் செய்தது. இதுவும் வாடிக்கையாளர்களிடம் வரவேற்ப்பை பெற தற்போது ரியல் மீ x2 புரோ எனும் புதிய பிரிமியம் போனை மெகா சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் அதிரடியாக உலகிலேயே முதல்முறையாக இரண்டு ஸ்பீக்கர்கள் அறிமுகம் செய்துள்ளது.

எனவே இதில் ஹெட்போன்கள் இல்லாமல் ஒரு சூப்பர் அனுபவமாக இசையைக் கேட்கமுடியும் என்று ரியல்மி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஒருபுறமிருக்க இந்திய சந்தையில் ஓரம் கட்டப்பட்டு விடுவோமோ என்ற பயந்து கொண்டிருந்த சாம்சங் நிறுவனம் திடீரென பட்ஜெட் செட்மெண்ட்டில் கவனம் செலுத்தி எம் சீரிஸ் எனும் புதிய போன்களை அறிமுகம் செய்ய அது இந்திய வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்து விட்டது. இதனையடுத்து 6 000 mAh மெகா  பேட்டரியுடன் கேலக்ஸி எம் 30 X  எனும் புதிய மாடலை அறிமுகம் செய்ய அது இந்திய வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்து போய்விட்டது ஆன்லைன் விற்பனை நிறுவனங்களின் பண்டிகை கால விற்பனையில் அதிகம் விற்ற போன் இதுவாகும் .

Categories

Tech |