தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் போலி மதிப்பெண் சான்றிதழ் கண்டறியப்பட்டால் சேர்க்கை ரத்து செய்யப்படுவதுடன் மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்களை பெற வேண்டும். கல்லூரிகளில் உள்ள பிரிவுகளின் விவரங்களை வெளிப்படைத்தன்மையுடன் தெரிவிக்க வேண்டும். இட ஒதுக்கீடு முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.