சிம்ம ராசி அன்பர்களே…!! இன்று தடைகள் அனைத்தும் விலகி செல்லும் நாளாக இருக்கும். வாய்ப்புகள் வாயில் தேடி வரும். குடும்ப சுமை கொஞ்சம் இருக்கும் , கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். இன்று உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும் , இனிமையான நாளாக இருக்கும். நீங்கள் எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். சுப விரயம் கொஞ்சம் அதிகரிக்கும் , பார்த்துக் கொள்ளுங்கள். தொழில் ரீதியாக புதிய அனுபவங்கள் ஏற்படலாம். மாமன் , மைத்துனர் வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய தகவல் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த சிக்கல் அனைத்தும் தீரும் , புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் , சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நன்மை கொடுக்கும. இயந்திரங்கள் , ஆயுதங்கள் , நெருப்பு ஆகியவற்றை கையாளும் போது பார்த்து கையாளுங்கள் , கவனமாக இருங்கள். இன்று நீங்கள் சிவன் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும். காலையில் எழுந்தவுடன் சிவனை வணங்கி இன்றைய நாளை தொடங்குவது மிகவும் சிறப்பு. நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் சிறப்பாகவே அமையும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்டமான எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்டமான நிறம் : வெள்ளை மற்றும் கருநீல நிறம்