Categories
மாநில செய்திகள்

பத்திரப்பதிவில் புதிய நடைமுறை…. தமிழகம் முழுவதும் இன்று முதல் அமல்… அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பத்திரப்பதிவு முறைகேடுகளை தடுக்க ஆவணம் எழுதுபவரின் உரிமம் எண்ணை இனி குறிப்பிட வேண்டும் என மதுரையில் பேட்டி அளித்த அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். இன்று முதல் ஆவணம் எழுதுபவர்களின் உரிமம் எண்ணை பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. பத்திரப்பதிவு முறைகேடுக்கு உடந்தையாக இருக்கும் எழுத்தர்கள், வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |