Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு ”மாமன்,மைத்துனர் ஒத்துழைப்பு” வர்த்தக முன்னேற்றம் கிட்டும்….!!

மேஷம் ராசி அன்பர்களே…!!  இன்று நீங்கள் தொலைபேசி வழி தகவல்களால் மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலுக்கு உறுதுணையாக நண்பர்கள் இருப்பார்கள். ஆடை , ஆபரணப் பொருட்கள் வாங்க நீங்கள் போட்ட திட்டங்கள் நிறைவேறும். இடமாற்றம் , ஊர் மாற்றங்கள் இன்னைக்கு ஏற்படுவதற்கான சூழ்நிலை இருக்குங்க. வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். பெற்றோர் வழியில் பெருமைக்குரிய தகவல்கள் வந்து சேரும். மாமன் , மைத்துனர் வழி ஒத்துழைப்பு இன்று திருப்திகரமாக இருக்கும். தொழில் போட்டிகள் அனைத்தும் விலகி செல்லும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் உழைப்பிற்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருக்கும். இன்று பங்கு வர்த்தகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். இன்று உங்களுக்கு சூரியன் வழிபாடு மிகவும் சிறப்பாக கை கொடுக்கும். காலையில் எழுந்ததும் சூரியனை வணங்கி இன்றைய நாளை தொடங்குவது மிகவும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்டமான எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்டமான நிறம் : வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |