இயக்குனர் பா.ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது குறித்து பேசியுள்ளார்.
தமிழ் திரையுலகில் அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இதை தொடர்ந்து இவர் மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். மேலும் இவர் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸானது. இந்த படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், சபீர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவான இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது குறித்து பேசிய பா.ரஞ்சித் ‘சார்பட்டா பரம்பரை படத்தில் வைக்க முடியாத சில விஷயங்களை முன் கதையாக வைத்து படம் எடுக்க யோசிக்கிறேன். அதாவது 1925-ல் ஆரம்பமாவது போல் கதை இருக்கும். இதை படமாகவோ அல்லது வெப் தொடராகவோ எடுக்கும் எண்ணம் உள்ளது’ என்று கூறியுள்ளார்.