நடிகர் பகத் பாசிலின் பிறந்தநாளை முன்னிட்டு விக்ரம் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
Wishing you a wonderful birthday and a fantastic year ahead #FahadhFaasil ✨#happybirthdayfafa pic.twitter.com/po2j9Gk4eX
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 8, 2021
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று பகத் பாசிலின் பிறந்தநாளை முன்னிட்டு விக்ரம் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. செம மாஸ் லுக்கில் பகத் பாசில் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.