ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் ஒரேநாளில் 4,566 பேருக்கு கொரோனா புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா டோக்கியோவில் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் டோக்கியோவில் ஒரே நாளில் கொரோனா சுமார் 4,566 பேரை பாதித்துள்ளது.
மேலும் சராசரியாக கடந்த ஒரே வாரத்தில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 3,893 ஆக உள்ளது. இதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 150 ஆக உள்ளது.