Categories
விளையாட்டு

சரித்திர நாயகன் நீரஜ் சோப்ராவுக்கு ….ரூபாய் 1 கோடி பரிசு …. பிசிசிஐ அறிவிப்பு ….!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம்  7 பதக்கங்களை வென்றுள்ளது .

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் ,வீராங்கனைகள் தடகள போட்டிகள் ,பேட்மிட்டண் , துப்பாக்கிச் சூடு,  மல்யுத்தம் உட்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர். இதில் மகளிர் பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கமும் , பேட்மிட்டணில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கமும் ,மகளிர் குத்துச் சண்டையில் லவ்லினா வெண்கலப் பதக்கமும் , மல்யுத்தத்தில் ரவிக்குமார் தாஹியா வெள்ளிப் பதக்கமும் , பஜ்ரங் புனியா வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர். அத்துடன் இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின்  நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் பிசிசிஐ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு தொகையை அறிவித்துள்ளது. இதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ராவிற்கு ரூபாய் ஒரு கோடி பரிசு தொகையாக  அறிவிக்கப்பட்டுள்ளது .அத்துடன் வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூபாய் 50 லட்சமும் ,வெண்கல பதக்கம் வென்றவர்களுக்கு ரூபாய் 25 லட்சமும் பரிசு தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும் வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு ரூபாய் 1.25 கோடி பரிசு தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |