பணிப்பெண் விமானத்தில் பயணம் செய்த கருப்பினத்தவரை ஆயுதம் தாங்கிய காவல்துறை அதிகாரிகளை கொண்டு வெளியேற்ற நினைத்தபோது சக பயணிகள் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் இருந்து Easyjet என்னும் நிறுவனத்தின் விமானம் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளது. அதில் பயணம் செய்த 2 கருப்பினத்தவர்கள் தங்களுடைய ஷூக்களை இருக்கைக்கு கீழே கலட்டி வைத்துள்ளார்கள். இதனையடுத்து பணிப்பெண் ஒருவருக்கு இந்த ஷூக்கள் இடையூறாக இருக்கும் என்பதால் அதனை அணிந்து கொள்ளுமாறு விமான பணிப்பெண் ஒருவர் கருப்பினத்தவர்கள் இடம் கூறியுள்ளார்.
ஆனால் இதனைக் கேட்டு கருப்பினத்தவர்கள் சற்று வெறுப்படைந்துள்ளார்கள். அதன்பின் அந்தப் பணிப்பெண், விமானத்தில் 2 பயணிகள் தாங்கள் சொல்வதை செய்யாமல் இருக்கிறார்கள் என்று கூறி காவல் துறை அதிகாரிகளை அழைத்துள்ளார்.
இதனடிப்படையில் விமானத்திற்கு விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள் கறுப்பினத்தவர்களின் பைகளையும், பாஸ்போர்ட் களையும் பறிமுதல் செய்துள்ளார்கள். ஆனால் சக பயணிகள் கருப்பினத்தவர் எந்த தவறையும் செய்யவில்லை என்று கூறி காவல்துறை அதிகாரிகளை அங்கிருந்து கிளம்ப செய்துள்ளார்கள்.