டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது. இந்திய வீரர் தீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 87.58 மீட்டர் எறிந்துள்ளார். இரண்டாம் சுற்றில் தீரஜ் 87.58 மீட்டரை போட்டியில் கலந்து கொண்ட எந்த ஒரு வீரரும் எட்டவில்லை. ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் இந்தியா முதல் முறையாக தங்கம் வென்றுள்ளது. இதற்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூபாய் 6 கோடி பரிசுத் தொகையை ஹரியான அரசு அறிவித்துள்ளது. விவசாயியின் மகனான சோப்ரா இந்திய ராணுவத்தில் சுபேதாரராக பணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.