Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. 2 வருடங்களாக நடைபெற்ற வழக்கு…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!…!!

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கூத்தநல்லூர் சேகரை பகுதியில் விஜய் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டில் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருவாரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் விஜய் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கு 2 வருடங்களாக நீதிமன்றத்தில் நடந்து வந்துள்ளது. இந்நிலையில்  இந்த வழக்கிற்கான இறுதி விசாரணை திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. அப்போது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விஜய்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து அந்த இளைஞனை காவல்துறையினர் மன்னார்குடி கிளை சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |