Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ்அப்பில் இனி உங்க அனுமதி இல்லாமா….. யாரும் குரூப்பில் Add பண்ண முடியாது….. அசத்தலான புதிய அப்டேட்……!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது.

பலவகையில் நமக்கு உபயோகமாக இருக்கும் வாட்ஸ்அப் குரூப் அம்சம் சில நேரங்களில் நமக்கு தொல்லை தரும் விஷயமாக மாறி விடுகிறது. சில  குரூப்கள் பெரும்பாலும் யூஸர்கள் அனுமதியின்றி உருவாக்கப்பட்டு அதில் அவர்களை சேர்க்கப்பட்டு விடுகின்றனர். இது வாட்ஸ்அப் யூஸர்களுக்கு பெரும் தொந்தரவாக இருக்கும். நம்மில் பலர் தேவையற்ற வாட்ஸ்அப் குரூப்பில் இருப்பதை வெறுக்கும் அதே நேரத்தில் அதிலிருந்து வெளியேற தயங்குவோம். இதற்கு சிறந்த வழி தேவையற்ற நபர்கள் உங்களை குரூப்பில் சேர்க்க முடியாத வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் வழங்கி இருக்கும் பில்டர் அம்சத்தை பயன்படுத்துவது.

உங்கள் வாட்ஸ்அப் அக்கவுன்ட்டின் பிரைவஸி செக்ஷனில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து கொள்ளும் வசதி அளிக்கப்பட்டிருக்கிறது. இது தேவையற்ற குரூப்பில் உங்களை சேர்ப்பதை தடுக்க உதவுகிறது. உங்களை யாரெல்லாம் குரூப்பில் சேர்க்கலாம் என்பதை நீங்கள் தீர்மானிக்க இந்த செட்டிங் உங்களை அனுமதிக்கிறது.

1. முதலில் வாட்ஸ்அப்பிற்கு சென்று வலதுபக்க மூலையில் இருக்கும் 3 புள்ளிகளை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

2. அடுத்து ஸ்க்ரீனில் பார்க்கும் settings-ஐ க்ளிக் செய்து பின்னர் Account என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

3. இப்போது Privacy-ஐ க்ளிக் செய்து 6-ஆவதாக இருக்கும் Groups என்ற ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

4. நீங்கள் இப்போது ஸ்கிரீனில் Everyone என்று டிஃபால்ட்டாக ஆப்ஷன் தேர்வு செய்யப்பட்டிருப்பதை பார்ப்பீர்கள். இது வழக்கம் போல எல்லோரையும் உங்களை வாட்ஸ்அப் குரூப்பில் சேர்க்க அனுமதிக்கும் விருப்பமாகும்.

5. அதற்கு கீழ் My Contacts மற்றும் My Contacts Except என்ற இரு ஆப்ஷன்கள் இருக்கும். இதில் My Contacts என்ற ஆப்ஷனை நீங்கள் தேர்வு செய்வதன் மூலம் உங்கள் மொபைல் கான்டாக்டில் இல்லாத நபர்கள் உங்களை குரூப்பில் சேர்ப்பதிலிருந்து தப்பிக்கலாம்.

6. அடுத்ததாக இருக்கும் My Contacts Except என்ற ஆப்ஷனை செலக்ட் செய்வதன் மூலம் நீங்கள் உங்கள் மொபைல் கான்டாக்ட் லிஸ்ட்டில் இருக்கும் நபர்களில், உங்களை யார் குரூப்களில் சேர்க்கலாம் என்பதை நீங்கள் தீர்மானித்து கொள்ளலாம். My Contacts Except-ஐ செலக்ட் செய்த பின், நீங்கள் தேர்வு செய்யும் நபர்கள் மட்டுமே உங்களை ஒரு குரூப்பில் சேர்க்க முடியும்.

Categories

Tech |