கடற்கரையில் போட்டோ ஷூட் நிகழ்த்தியுள்ள நடிகை லாஸ்லியாவின் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை லாஸ்லியா. இவருக்கு விளம்பரங்கள் மற்றும் படங்களில் நடிக்க அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக ‘பிரெண்ட்ஷிப்’ எனும் திரைப்படத்தில் லாஸ்லியா கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் மற்றொரு பிக்பாஸ் பிரபலமான தர்ஷனுடன் இணைந்து ‘கூகுள் குட்டப்பன்’ எனும் திரைப்படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை லாஸ்லியா கடற்கரை மணலில் அமர்ந்தபடி ஒரு போட்டோ ஷூட் நிகழ்த்தியுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
https://www.instagram.com/p/CSQykGIBEoC/?utm_medium=copy_link