Categories
சினிமா தமிழ் சினிமா

விறுவிறுப்பாக உருவாகி வரும் “பீஸ்ட்”…. சிவகார்த்திகேயனின் ‘இன்ட்ரோ சாங்’…. வெளியான கலக்கல் தகவல்….!!!

நடிகர் விஜய்யின் “பீஸ்ட்” படத்திற்காக சிவகார்த்திகேயன் “இன்ட்ரோ” பாடலை எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கும் “பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரபல நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வரும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

விறுவிறுப்பாக தயாராகி வரும் இப்படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் ஒன்றை எழுதியுள்ளார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் எழுதும் பாடல் பீஸ்ட் படத்தின் இன்ட்ரோ பாடல் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தில் இடம்பெற்றுள்ள செல்லம்மா எனும் பாடல் பட்டிதொட்டியெங்கும் ட்ரெண்டானது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். ஆகையால் பீஸ்ட் படத்திற்காக சிவகார்த்திகேயன் எழுதியுள்ள பாடலைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |