Categories
ஆன்மிகம் இந்து

ஆடி மாதத்தில் என்னென்ன சிறப்புகள் இருக்கு….? வாங்க இத பாத்து தெரிஞ்சிக்கலாம்….!!!

ஆடி மாதத்தில்தான் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கியமான தினங்கள் வருகின்றன. ஆடி செவ்வாய், வெள்ளி, ஆடிப்பதினெட்டு, ஆடிப்பூரம் ஆடிப்பௌர்ணமி, அடி அம்மாவாசை, ஆடி தபசு, ஆடி கீர்த்திகை ஆடி பெருக்கு என பல சிறப்பு வழிபாட்டு தினங்கள் உள்ளன.

ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆடி மாதம் சூரியன் கடகம் ராசியில் சஞ்சரிக்கிறார். தமிழ் ஆண்டின் நான்காவது மாதமான கடக மாதத்தில் தட்சிணாயண புண்ணிய காலம் தொடங்குகிறது. இந்த மாதத்தில் காற்றும் மழையும் பூமி குளிர பெய்யும். ஆடி மாதம் அற்புதங்கள் நிறைந்த மாதம். ஆன்மீக அலைகள் நிரம்பிய மாதம். ஆடி மாதத்தில் ஆடித்தபசு, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை என பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.

தட்சிணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சுமக் சக்திகள் வெளிப்படும். பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும். உயிர்களுக்கு ஆதார சக்தியை அதிகமாகத் தரும் மாதம் இதுவே. இந்த மாதத்தில் சூரியன் கடகம் ராசி, செவ்வாய் மீனம் ராசி, புதன் மிதுனம் ராசி ஆடி 17க்கு மேல் கடக ராசி, குரு தனுசு ராசி, சுக்கிரன் ரிஷபம் ராசி ஆடி 16க்கு மேல் மிதுனம் ராசி, சனி மகரம் ராசி, ராகு மிதுனம் ராசி, கேது தனுசு ராசி என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளது.

ஆடி மாதம் அம்பிகைக்கு உகந்த மாதம் ஆடி மாதம் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும் இந்த மாதம் திருவிழாக்கள் கொண்டாட்டங்கள் இன்றி கோவிலுக்குள் மட்டுமே நடைபெறப்போகின்றன. ஆடி மாதத்தை பீடை மாதம் என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், பீட மாதம் என்றுதான் பெயர்.

அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது. ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகள் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை தரும்.

Categories

Tech |