சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் டான். இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கும் இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சூரி, சிவாங்கி, சமுத்திரகனி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் .
இந்நிலையில் டான் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் சூரி பைக் ஓட்ட அவரின் பின்னால் சிவகார்த்திகேயன் கழுத்தில் கேமராவுடன் உட்கார்ந்து இருப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து டான் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் போட்டோகிராபர் அல்லது பத்திரிக்கையாளர் கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .