சுவிட்சர்லாந்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் சுமார் 26% பேர் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா சுவிட்சர்லாந்தில் கடந்த வாரம் 4,988 பேரை பாதித்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் இந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, கடந்த வார எண்ணிக்கையை விட 26 சதவீதம் அதிகரித்து சுமார் 6,303 பேரை புதிதாக பாதித்துள்ளது.
இதற்கிடையே தடுப்பூசி பெறாத இளம் வயதினரை கொரோனா குறி வைத்து தாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆய்வு ஒன்றில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தடுப்பூசி பெற்றவர்களை கொரோனா தாக்குவதென்பது சுமார் 80% தடுப்பூசியை பெறாதவர்களை கொரோனா பாதிப்பதைவிட குறைவு என்பதாகும்.