Categories
உலக செய்திகள்

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா….? புயல் எச்சரிக்கை அறிவிப்பு…. தகவல் வெளியிட்ட ஜப்பான் வானிலை மையம்…!!

ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் புயல் தாக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டிகள் கடந்த ஜூலை 23-ஆம் தேதி ஆரம்பமாகி ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிறைவடைய உள்ளன. இந்த நிலையில் டோக்கியோ நகரை புயல் தாக்கும் வாய்ப்பு உள்ளதாக ஜப்பான் வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதிலும் போட்டியின் இறுதி நாளான 8 ஆம் தேதி அன்று புயல் தாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து  7 மற்றும் 8 ஆம் தேதிகளில் கிழக்கு கடற்கரையில் பலத்த காற்றுடன் புயல் வீசி ராட்சத அலைகள் எழும்பும். மேலும் நிலச்சரிவு, வெள்ளம் போன்ற பேரிடர்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் ஒலிம்பிக் போட்டிகளில் வாட்டர் போலோ மற்றும் ஜிம்னாஸ்டிக் போட்டிகள் உள் விளையாட்டு அரங்கத்தில் வரும் ஞாயிறு மாலை நடைபெறவிருக்கிறது. இதனை தொடர்ந்து டோக்கியோவில் உள்ள  ஷூசுவோகாவில் சைக்கிள் டிராக் பந்தயமும் சப்போராவில் ஆண்களுக்கான மாரத்தான் போட்டியும் நடைபெறவுள்ளது. இது குறித்து ஒலிம்பிக் 2020 போட்டிகளின் செய்தி தொடர்பாளர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “புயல் எந்த திசையை நோக்கி நகர்கிறது என்பதை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். புயலை பற்றிய எந்தவித தகவலையும் வெளிவிட வேண்டும் அப்பொழுது தான் அதன் பாதிப்பை தவிர்க்க முடியும்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |