ரிலையன்ஸ் ஜியோ பல்வேறு திட்டங்கள் மூலம் புதிய மற்றும் கவர்ச்சிகரமான சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அதில் ஒன்று ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், நேரடியாக தொலைக்காட்சி மூலம் வீடியோ அழைப்பை செய்ய சிறந்த சலுகையை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ ஃபைபர் வாய்ஸ் நிறுவனம் புதிய மற்றும் சிறந்த அப்டேட்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த புதிய அம்சத்தின் மூலம், ஜியோ ஃபைபர் பயனர்கள் டிவி திரை மூலம் எச்டி வீடியோ அழைப்புகளைச் செய்ய முடியும். உங்கள் மொபைல் கேமராவை வெப்கேமராக பயன்படுத்தி ஸ்மார்ட் டிவி மூலம் வீடியோ அழைப்பை மேற்கொள்ள ஜியோ ஃபைபர் வாய்ஸ் புதிய அம்சத்தை வழங்குகிறது. இதன்மூலம் உங்கள் வீட்டில் உள்ள டிவியின் பெரிய ஸ்க்ரீன் மூலம் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு டிவி வீடியோ கால் செய்யலாம்.
ஜியோ வாடிக்கையாளர்கள் டிவி வீடியோ கால் எப்படி செய்வது?
1. முதலில், ஜியோ பயனர் உங்கள் மொபைல் போனில் “ஜியோஜாய்ன் ஆப்” பதிவிறக்கவும்.
2. செயலியை பதிவிறக்கம் செய்தபின், உங்கள் 10 இலக்க ஜியோஃபைபர் எண்ணை உள்ளிட்டு சாதனத்துடன் இணைக்கவும்.
3. JioFiber மற்றும் JioJoin ஆப் இணைக்கப்பட்டவுடன், அது உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது மொபைல் போனை ஒரு துணை சாதனமாக மாற்றுகிறது.
4. இப்போது உங்கள் மொபைலில் உள்ள JioJoin App- ன் அமைப்புகளுக்குச் சென்று “மொபைலில் கேமரா” அம்சத்தை இயக்கவும்.
5. இந்த அம்சத்தை இயக்கிய பிறகு, நீங்கள் தொலைபேசியின் கேமராவை வெப்கேமராகப் பயன்படுத்த முடியும், மேலும் அந்த அழைப்பின் வீடியோ வீட்டில் இருக்கும் டிவியில் தொடர்ந்து இயங்கும்.