வாட்ஸ்அப் பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது புதிய அப்டேட் வெளியிட்டு வருகின்றது. டிஜிட்டல் அசிஸ்டெண்டுகளின் உதவியுடன், வாட்ஸ்அப் பயனர்கள் மெசேஜிங் செயலியில் டைப் செய்யாமலேயே சில செய்திகளை எளிதாக அனுப்ப முடியும். உங்களுக்காக செய்திகளைப் படித்துக் காட்டும் படியும் நீங்கள் உங்கள் டிஜிட்டல் அசிஸ்டெண்டிடம் கேட்கலாம். இதற்கு உங்கள் வர்சுவல் அசிஸ்டெண்ட் உங்களிடம் ஒரு அனுமதியை கேட்கும். உங்கள் பணி நிறைவடைய அதை நீங்கள் வழங்க வேண்டும். உங்கள் போனின் நோட்டிஃபிகேஷன்களுக்கான அனுமதியையும் நீங்கள் அளிக்க வேண்டும்.
இந்த செயல்முறையில், “உங்கள் செய்திகள், காலண்டர் நிகழ்வுகள் மற்றும் பிற முக்கியமான தகவல்களைக் கேட்க, உங்கள் நோட்டிஃபிகேஷனுக்கான அணுகலை Google செயலிக்கு அளிக்கவும்” என்ற செய்தியை கூகிள் காண்பிக்கும். நீங்கள் இதை செட்டிங்கில் சென்று மாற்றலாம். செட்டிங்கில் உள்ள நோடிஃபிகேஷன் பிரிவுக்கு சென்று, Google க்கான நோடிஃபிகேஷன் அணுகலை முடக்கவும்.
Step 1: முதலில், “Hey Google” அல்லது “Okay Google.” என்று கூறி இந்த செயல்முறையை துவக்க முடியாவிட்டால், உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் செயலியை நிறுவ வேண்டும். உங்கள் ஆண்ட்ராய்டு போன் அல்லது டேப்லெட்டில், Google அசிஸ்டண்ட்டைச் செயல்படுத்த முகப்பு பொத்தானைத் தொட்டுப் பிடிக்கவும் (touch and hold).
Step 2: நீங்கள் அதை நிறுவியதும், “Open” பொத்தானைத் டேப் செய்து “ஹே கூகிள்” என்று சொல்லவும்.
Step 3: அதன் பிறகு, டிஜிட்டல் அசிஸ்டண்ட் உங்களுக்கு பதிலளிக்கும். அதன் பிறகு நீங்கள் செய்தி அனுப்ப விரும்பும் நபரின் பெயரை குறிப்பிட்டு, “Send a WhatsApp message to XXXX (name)” என்று கூற வேண்டும்.
Step 4: செய்தியில் என்ன குறிப்பிடப்பட வேண்டும் என்று கூகிள் அசிஸ்டண்ட் கேட்கும்.
Step 5: வர்சுவல் அசிஸ்டெண்ட் செய்தியை தட்டச்சு செய்து காண்பிக்கும். செய்தி அனுப்ப தயாராக இருப்பதாக பின்னர் கூறப்படும். அதன் பிறகு, “Okay, send it” என்று பயனர் கூற வெண்டும். அதன் பின்னர் உங்கள் செய்தி அனுப்பப்படும். இரண்டாவது முறை, அசிஸ்டெண்ட் நேரடியாக செய்தியை அனுப்பலாம்.