Categories
தேனி மாவட்ட செய்திகள்

நடந்துவரும் வளர்ச்சி பணிகள்… அதிகாரிகள் திடீர் ஆய்வு… குறைகளை கேட்டறிந்த ஆட்சியர்…!!

கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் பகுதிக்குட்பட்ட கிராமங்களில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் தாழையூத்து கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்காக தலா 3 லட்சம் மதிப்பீட்டில் சோலார் விளக்குகளுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது. அதனை நேரில் சென்று பார்வையிட்ட ஆட்சியர் அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்துள்ளார்.

இதனையடுத்து தொப்பையாபுரம் பகுதியில் சுமார் 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பெண்கள் சுகாதார வளாகம் கட்டிட பணிகளையும், அதன் தரம் குறித்தும் கேட்டறிந்துள்ளார். மேலும் மயிலாடும்பாறையில் கொரோனா குறித்த அச்சமின்றி பேருந்துகளில் அதிகளவு பயணிகளை ஏற்றி வந்ததால் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை ஆட்சியர் முரளிதரன் எச்சரித்து அனுப்பியுள்ளார். இந்த ஆய்வில் தாசில்தார் சந்திரசேகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, கடமலை-மயிலை ஒன்றிய ஆணையர்கள் சரவணன், திருப்பதி, முத்து உட்பட பல நிர்வாகிகள் உடனிருந்துள்ளனர்.

Categories

Tech |