முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரிலுள்ள விருதை பிரதமர் மோடி பெயர் மாற்றி அறிவித்துள்ளார். விளையாட்டுத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இனி ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான்சந்த் பெயரில் வழங்கபடும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மேஜர் தயான்சந்த் இந்திய ஹாக்கியின் தந்தையாக கருதப்படுகிறார். இவருடைய பெயரில் இனிமேல் தயான்சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த விருது பெறும் வீரர்களுக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூபாய் 25 லட்சம் பணம் பரிசு வழங்கப்படுகிறது.