Categories
ஆன்மிகம் இந்து

“நாகர் வழிபாடு” செய்து பாருங்கள்….. சகல சௌபாக்கியமும் வந்து சேரும்… முன்னோர்கள் கூறும் தகவல்…!!!

நாக தெய்வங்களை வழிபட்டுவரும் போது, ​​ஐஸ்வர்யமும் குடும்ப செழிப்பும் தானாகவே வரும். பண்டைய காலங்களிலிருந்தே நாக வழிபாடு என்பது வழக்கத்தில் உள்ளது. தொடர்ந்து வழிபாடு செய்து வரும் ஒருவர், திடீரென வழிபாட்டை நிறுத்தினால் பெரும் இன்னல்களுக்கு வழிவகுப்பதாக நம்பப்படுகிறது.

அதே போல், கட்டுமான பணிகளின் போதும், வீடு கட்டும் முதல் கட்ட பூமி பூஜை, நாக தெய்வங்களின் திருப்திக்காக செய்யப்படுகிறது. மேலும், நாக தெய்வங்களுக்காக விதிக்கப்பட்ட இடங்களில் கோயில் எழுப்பி வழிபடுவதும், பலன்களை கொடுக்கிறது. நாகம் பரம சிவனின் கழுத்தை அலங்கரிப்பதாகக் கருதி மக்கள் வழிபட்டு வந்தனர். நாகதோஷம் இருந்தால் குழந்தை பிறக்காது என்று நம்பினர். இன்றும் புற்றுக்குப் பால் வார்த்து வழிபடும் வழக்கம் உள்ளது. முதலில் பயம் காரணமாக நாகங்களை வழிபட்டவர்கள் பின்னர் அது ஏதோ ஒரு தெய்வ சக்திக்குக் கட்டுப்பட்டு நடப்பதாகவும், விதி முடிந்தவரை மட்டுமே அது கடிப்பதாகவும் நம்பினார்கள்.

மனித ஆத்மாவானது மனித உடலைத் தவிர காக்கை மற்றும் நாகத்தின் உடல்களில் சுலபமாக பிரவேசிக்கலாம் என்று சித்தர்களின் ரகசிய சித்தாந்தங்கள் சொல்கின்றன. இதனால் தவ வாழ்வை எந்தத் தொந்தரவும் இல்லாமல் கழிக்க பாம்பின் உடல்களை தேர்ந்தெடுத்து பல சித்தர்கள் வாழலாம் என நம்பப்படுகிறது. அறியாமல் சர்ப்பங்களை சாகடித்தால் அவர்களின் தவத்தைக் கலைத்த பாவத்திற்கு ஆளாக நேரிடும். எனவேதான் பாம்புகளை சாகடிக்க வேண்டாமென முன்னோர்கள் சொல்லி வந்தார்கள்.

முன்னோர் சொல்லிபடி, நாகர் சிலைக்கு நீரால் அபிஷேகம் செய்து, பின்னர் பால் அபிஷேகம் செய்வது சிறப்பாகும். இந்த வழிபாட்டைச் செய்தால், ராகு கேது தோஷங்கள் நீங்கும் என்பதும் ஐதீகம்.

சிறப்புமிக்க நாக கோயில்கள்:

நாகர்கோவில் நாகநாதர் கோயில், நெல்லை சங்கரநாராயணர் கோயில், ராமநாதபுரம் நயினார் கோயில், நெல்லை கார்க்கோடகன் கோயில், புன்னைநல்லூர் கோயில்.

Categories

Tech |