நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள “உடன்பிறப்பே” படத்தினுடைய போஸ்டர் கிழக்குசீமையிலே பட கெட்டப்பில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சசிகுமார் நடிப்பில் வெளியாகும் படங்கள் சமீபகாலமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து சசிகுமார் கிராமத்து கதை கொண்ட படங்களில் அதிகம் ஆர்வம் காட்டினார். மேலும் பேட்ட படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். தற்போது நடிகர் சசிகுமார் “உடன்பிறப்பே” திரைப்படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து நடித்துள்ளார்.
மேலும் 2டி என்டர்டெய்ன்மெண்ட் (சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம்) தயாரித்துள்ள இந்த உடன்பிறப்பே திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகவும், கிழக்கு சீமையிலே படத்தில் நடித்த ராதிகாவை போலவே இருப்பதாகவும் பலரும் கூறுகின்றனர். இதற்கிடையே படக்குழுவினர் இந்த படம் கிராமத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது என்று தகவல் தெரிவித்துள்ளனர்.