Categories
உலக செய்திகள்

“அச்சத்தில் உறைந்த பயணிகள்”… நடுவானில் கழன்ற விமானத்தின் எஞ்சின் மேற்கூரை..!!

அமெரிக்காவில் விமானத்தின் என்ஜினின் மேற்கூரை கழன்றதால் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்திலுள்ள டென்வர் நகரில் இருந்து, யுனைடட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புளோரிடாவின் ஆர்லண்டோ நகருக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது  பாதி வழியில்  விமானத்தின் வலதுபக்க என்ஜினின் மேற்கூரை மெல்ல மெல்ல கழன்று ஆட்டம் கண்டுள்ளது.

Image result for US plane engine panel comes loose

அப்போது எதிர்பாராதவிதமாக எஞ்சி மேற்கூரை கழன்றதை பார்த்த பயணி ஒருவர் பதறிப்போய் பணிப்பெண்ணிடம் சொல்ல, பணிப்பெண்  விமானிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானி  சற்றும் யோசிக்காமல் மீண்டும் புறப்பட்ட இடமான டென்வர் நகருக்கு திருப்பி  அவசரமாக தரையிறக்கினார்.

Image result for US plane engine panel comes loose

இதனால் அச்சத்தில் இருந்த பயணிகள் ஒருவழியாக தரையிறங்கியதும் பெருமூச்சி விட்டனர். மேலும் இது பற்றி  விமான பாதுகாப்பு அதிகாரிகள் கூறும்போது, விமானம் இன்னும் சிறிது நேரம் பறந்திருந்தால் காற்றின் வேகத்தில் என்ஜின் தீப்பற்றியிருக்கும் எனதெரிவித்தனர். சரியான நேரத்தில் பயணி ஒருவர் தகவல் கொடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Categories

Tech |