Categories
சினிமா தமிழ் சினிமா

3 ஆண்டுகள் கழித்து… ஓடிடி தளத்தில் வெளியீடு…. சந்தானத்தின் திரைப்படம்….!!

நடிகர் சந்தானத்தின் சர்வர் சுந்தரம் திரைப்படமானது ஓடிடி தளத்தில் வெளியிட போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சந்தானம். இவர் கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு ஆகியோருக்கு இணையான காமெடி நடிகராக பிரபலமானார். இதனையடுத்து அவர் தீடிரென்று காமெடி நடிகராக நடிக்க மாட்டேன் என்றும் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என முடிவு செய்தார். அதன் பிறகு ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தாலும் அவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் சந்தானத்தின் டிக்கிலோனா படம் திரையரங்குகளில் விரைவில் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

இதனை தொடர்ந்து  இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் சபாபதி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் மூன்று ஆண்டுகளாக வெளிவராமல் இருக்கும் அவரின் சர்வர் சுந்தரம் படத்தை திரையரங்கில் வெளியிட படக்குழு நினைத்திருந்தனர். ஆனால் கொரோனா பரவலின் காரணமாக திரையரங்கள் மூடப்பட்டதால் இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இது குறித்து தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படமானது ஆனந்த் பால்கி இயக்கத்தில் கெனன்யா பிலிம்ஸ் தயாரித்துள்ளது. மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆவார். இதில் முக்கிய வேடங்களில்  பிஜேஷ் நாகேஷ், வைபவி சாண்டில்யா போன்றோர் நடித்துள்ளனர்.

Categories

Tech |