Categories
டெக்னாலஜி பல்சுவை

சாம்சங் நிறுவனத்தின் ரகசிய ஸ்மார்ட்போன் … வெளிவந்த ஸ்மார்ட்போன் அம்சங்கள் ..!!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனின் புதிய வெர்சனை அறிமுகம் செய்ய உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு கேலக்ஸி நோட் 10 சீரிசில் ஸ்மார்ட்போனின் இரண்டு மாடல்களை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனிற்கு கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 பிளஸ் என பெயரிடப்பட்டுள்ளது.  மேலும், இது 6.3 மற்றும் 6.8 இன்ச் அளவுகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சாம்சங் நிறுவனம் எதிர்காலத்தில் இரு மாடல்களுடன் மற்றொரு மாடலை புதிதாக அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.

Image result for கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 பிளஸ்

இந்த ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும், கேலக்ஸி நோட் சிறிய வெர்ஷன் SM-N770F எனும் மாடல் நம்பரில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த நம்பரில் N என்ற எழுத்தே ஸ்மார்ட்போன் கேலக்ஸி நோட் சீரிஸ் தான் என்பதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளதாக தெரிகிறது. இந்த ஆண்டு அறிமுகமான கேலக்ஸி நோட் சீரிஸ் மாடல்கள் SM-N9xx என்ற மாடல் நம்பர்களை கொண்டுள்ளது.

Related image

இதற்கு முன்னதாக 2014 ஆம் ஆண்டு சாம்சங் வெளியிட்ட கேலக்ஸி நோட் 3 நியோ மாடலில் SM-N750 எனும் பெயர் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதன்படி SM-N770F என்ற பெயரில் உருவாகும் புதிய ஸ்மார்ட்போன் கேலக்ஸி நோட் 3 நியோவின் மேம்பட்ட மாடலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் என்பதால் இதில் எஸ் பென் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கலாம்.

Categories

Tech |