Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அட்லீ- ஷாருக்கான் படத்தின்… டீசர் ரிலீஸ் எப்போ தெரியுமா?… வெளியான செம மாஸ் தகவல்…!!!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது இவர் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.

Shah Rukh Khan and Nayanthara to star in Atlee's upcoming Hindi film? |  Entertainment News,The Indian Express

மேலும் இந்த படத்தில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் அட்லீ- ஷாருக்கான் இணையும்  படத்தின் டீசரை வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |