மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் 6 திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தொடரில் பெகாசஸ் உளவு விவகாரம், புதிய வேளாண் சட்டங்கள், பெட்ரோல் டீசல் விலை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை கண்டித்து எதிர்க்கட்சிகள் தினமும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தொடர்ந்து பாராளுமன்றம் முடங்கி வருகிறது. குறிப்பாக பெகாசஸ் உளவு விவகாரம் குறித்த விவகாரம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு உள்ளது. ஆனால் மத்திய அரசு இது குறித்து பேசுவதற்கு முன் வரவில்லை. இன்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கங்களை எழுப்பினர். மாநிலங்களவையை தொடர்ந்து முடக்கும் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்காய நாடு எச்சரிக்கை செய்திருந்தார். அதன்படி இன்று அமளியில் ஈடுபட்ட டோலா சென், நதிமுல் ஹக், அபீர் ரஞ்சன் பிஸ்வாஸ், சாந்தா சேத்ரி, அர்பிதா கோஷ், மவுசம் நூர் ஆகிய 6 திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் .அதன்பிறகும் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தது.