சென்னை ஐஐடி விழாவில் தமிழ் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி சென்னை ஐஐடி நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்று இந்தியா – சிங்கப்பூர் ஹேக்கத்தான் போட்டியில் வேற்றோருக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, தமிழர்களின் விருந்தோம்பல் மிகச் சிறந்தது. சென்னையில் காலை இட்லி, தோசை, வடை என அத்தனையும் எனக்கு மிகவும் பிடிக்கும், அது உற்சாகம் தரக்கூடியது என்று பேசி தமிழர்களை பெருமைப்படுத்தி பேசினார்.
அதுமட்டுமில்லாமல் ஐஐடி பட்டங்களை மாணவ மாணவிகளுக்கு வழக்கியபின் உரையாற்றிய பிரதமர் மோடி, உலகின் மிகப் பழமையான மொழி தமிழ், தமிழ்மொழியின் பிறப்பிடம் தமிழகம்’ தமிழ் மொழியை போற்றுவோம் என பெருமையுடன் பேசினார். இதை கேட்ட மாணவர்கள் அரங்கம் அதிர ஒலி எழுப்பி உற்சாகத்தில் மகிழ்ந்தனர். இந்த பேச்சினால் தமிழகத்தில் பிரதமர் மோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தமிழ் குறித்து மோடி பேசியது மகிழ்ச்சியளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, சென்னை ஐஐடி விழாவில் தமிழ் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. அமித்ஷா இந்தி பற்றி பேசியது விவாதத்தை ஏற்படுத்தி நிலையில் மோடி பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.