பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பன்றிகள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கனடா நாட்டின் கியூபெக் பகுதியில் பன்றிகள் பண்ணை ஒன்று உள்ளது. இந்த பண்ணையில் பன்றிகள் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. இதனையடுத்து இந்த பண்ணையில் வேலை செய்யும் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பன்றிகளை இறைச்சியாக்கும் வேலையானது தடைபட்டுள்ளது. இந்த நிலையில் பன்றிகளின் எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டே இருந்தால் அவை மூர்க்கத்தனமாகி விடும்.
மேலும் அவற்றை இறைச்சிக்காக பயன்படுத்த முடியாமல் கருணைக்கொலை செய்ய வேண்டிய சூழல் உருவாகிவிடும் என்று கூறப்படுகிறது. இதனால் சுமார் 1,30,000 பன்றிகள் கடந்த வாரம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக ஒரு பன்றியின் இறைச்சியானது 600 பேர் உண்ணக்கூடிய அளவுக்கு இருக்கும். ஆதலால் பன்றிகளை கருணை கொலை செய்வது மிகப்பெரிய இழப்பாகும். இதற்கு தீர்வு காண்பதற்காக பணியாளர்கள் துறை அமைச்சர்களிடம் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.