இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது .
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்திய அணியில் மயங்க அகர்வாலுக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக கே.எல் ராகுல், ஹனுமா விஹாரி மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் ஆகிய மூன்று பேரில் யாரேனும் ஒருவர் தொடக்க வீரராக களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா 2-வது இடத்திலும் , இங்கிலாந்து 4-வது இடத்திலும் உள்ளது.
இதுவரை இரு அணிகளும் 126 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இந்திய அணி 48 போட்டிகளிலும் இங்கிலாந்து 29 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து இங்கிலாந்தில் நடைபெற்ற 62 போட்டிகளில் இங்கிலாந்து அணி 34 போட்டிகளிலும் ,இந்தியா 7 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்த டெஸ்ட் தொடரை எந்த அணி கைப்பற்றும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.