Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“அதைத் திறக்க வேண்டும்” நூதன முறையில் விவசாயிகள் போராட்டம்…. உறுதி அளித்த அதிகாரிகள்….!!

நேரடிக் கொள்முதல் நிலையங்களை கூடுதலாக திறக்கக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சடையம்பட்டி பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரி டிராக்டர்களை சாலையில் நிறுத்தி விவசாயிகள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். தற்போது அறுவடை பணி நடந்து வருவதால் நெல் மூட்டைகளை 15க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வருவதால் கூடுதல் கொள்முதல் நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த பொன்னமராவதி தாசில்தார் ஜெயபாரதி மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் விவசாயிகளிடம் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். அதன்பின் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |