Categories
உலக செய்திகள்

பச்சை நிறமாக மாறிய வானம்… பீதியை ஏற்படுத்திய வீடியோ… ஆராய்ச்சியாளர்கள் பரபரப்பு தகவல்..!!

துருக்கியில் வானம் பச்சை நிறமாக மாறிய சம்பவத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

துருக்கியில் உள்ள இஸ்மிர் என்ற நகரத்தில் அடையாளம் தெரியாத பொருள் ஒன்று வான் பகுதியில் பெரும் சத்தத்தோடு எழுந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கூட்டமாக இருந்த மேகங்களுக்கிடையே புகுந்து பச்சை நிறமாக வான் பகுதி முழுவதும் மாறியது. அதன்பிறகு பந்து போன்று தோன்றிய சிறு நெருப்பு ஒன்று திடீரென மறைந்தது.

அப்பகுதியைச் சேர்ந்த ஹலீல் இப்ராஹிம் என்பவர் இந்த அரிய நிகழ்வை வீடியோவாக தனது மொபைலில் எடுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே துருக்கியில் உள்ள வானியல் ஆராய்ச்சியாளர்கள் இது விண்கற்களில் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |