காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கீழ்கதிர்பூர் பகுதியிலுள்ள குடியிருப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2112 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதில் 1,406 குடியிருப்புகள் வேகவதி நதிக்கரையில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள 706 குடியிருப்புகளுக்கு விருப்பமானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்தியாவில் தனது பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் பெயரிலோ சொந்தவீடு இல்லாமலும், ஆண்டிற்கு 3 லட்சம் வருமான வரி என்ற சான்றிதழுடன், குடும்ப தலைவர் மற்றும் குடும்ப தலைவி ஆகியோரின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றுடன் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் முகாமில் கலந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.