கொரோனா ஊரடங்கு காரணமாக பொது மக்கள் மட்டுமல்லாமல் தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் தொழில்துறைகளில் ரியல் எஸ்டேட் துறையும் ஒன்று தான். தற்போது மக்கள் அனைவரும் நிதி நெருக்கடியில் உள்ளதால், வீடு வாங்க பஞ்சாப் நேஷனல் வங்கி சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி மேக்ஸ் சேவர் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆக வாடிக்கையாளர்கள் வீட்டுக்கடன் பெறுவதால் அதிக அளவு பணத்தை சேமிக்க முடியும் என்று வங்கி தெரிவித்துள்ளது.
வீட்டு கடன் வாங்கியோர் வட்டித் தொகையில் நிறைய பணத்தை சேமிக்க முடியும் எனவும், உபரி தொகையை ஓவர் டிராஃப்ட் அக்கவுண்டில் டெபாசிட் செய்து வைத்துக் கொள்ளலாம் எனவும் பஞ்சாப் நேஷனல் வங்கி கூறியுள்ளது. இந்த ஓவர் டிராஃப்ட் அக்கவுண்டில் சேமித்து வைக்கும் பணத்தையும் கடன் வாங்கிய நபர் தனது தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் இனி வீட்டுக் கடன் வாங்க திட்டமிட்டு இருப்போர், ஏற்கனவே கடன் வாங்கியோர் என இரு தரப்பினருக்குமே இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி பலன் பெறலாம் என வங்கி தெரிவித்துள்ளது.